பிரான்ஸ் போர்டோ அருகே காட்டுத்தீ -ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
பிரான்ஸ் நாட்டின் போர்டோ நகரம் அருகே பரவியுள்ள காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, போர்டோவின் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 55,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த தீ, நகர மையத்திலிருந்து 25 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் பரவி வருகிறது.
நகர மேயர் தோமஸ் காசனவே, போர்டோ நகரம் முழுவதும் வெளியேற்றப்பட வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்தாலும், தீயின் வேகம் மற்றும் திசை மாற்றம் காரணமாக நிலைமை மிகுந்த ஆபத்தானதாக உள்ளது.

இந்த காட்டுத்தீ பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் கடந்த வாரம் முழுவதும் பரவி, மொத்தம் 3.3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரான்சில் மட்டும் 42,000 ஹெக்டேர் காடுகள் எரிந்துள்ளன. இது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Francja ewakuowała ponad 220 000 osób, gdy największy pożar lasu rozprzestrzenia się na południowym zachodzie kraju, zagrażając Bordeaux pic.twitter.com/O5OyYdEMWg
— Poland news War in Ukraine (@Propeertys) July 26, 2026
தீயணைப்பு பணிகளில் 2,500 தீயணைப்பு வீரர்கள், 1,500 இராணுவத்தினர் மற்றும் 1,200 பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
தீயின் தீவிரம் காரணமாக போர்டோ விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன. 28 ஈசிஜெட் விமானங்கள் தாமதமாகியுள்ளதுடன், ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
🚨 ALERTE ROUGE 🚨
— SPIRITFIT (@SpiriTfitT) July 26, 2026
Vue DRAMATIQUE depuis un Canadair : les flammes dévorent tout à seulement 15 km de la métropole bordelaise !!
Le mégafeu de Gironde n’est plus contenu… Bordeaux est aux portes de l’enfer. Des milliers déjà évacués, le feu avance, le vent souffle…
On est en… pic.twitter.com/EEg6SAaSw5
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், “நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தீ போர்டோ நகரப் பகுதிக்குத் தாறுமாறாக நகர்கிறது” என எச்சரித்துள்ளார்.
அதேசமயம், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், “நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும். அரசு மக்கள் பக்கம் எப்போதும் இருக்கும்” என்று உறுதியளித்துள்ளார்.

ஸ்பெயினிலும் தீ பரவி, மாட்ரிட் மற்றும் வாலென்சியா பகுதிகளில் 90,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வாலென்சியா பிராந்தியத் தலைவர், “இந்த தீ எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது” என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |