நாட்டின் பாதுகாப்பில் ஒரு அடி முன்னே எடுத்துவைத்துள்ள பிரான்ஸ்
ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் பல தங்கள் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், பிரான்ஸ் ஒரு அடி முன்னே சென்று, கடலிலும் தனது பாதுகாப்பை பலப்படுத்தும் ஒரு முயற்சியைத் துவங்க இருப்பது தொடர்பில், பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பில் ஒரு அடி முன்னே...
ஆம், கடலிலும் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பிரான்ஸ் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்றை உருவாக்க இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
2038வாக்கில் தயார் ஆக இருக்கும் அந்த போர்க்கப்பல், 78,000 டன் எடையும், 310 மீற்றர் நீளமும் கொண்டதாக இருக்கும்.
French Navvy
அதில் 30 போர் விமானங்களை நிறுத்த வசதி இருப்பதுடன், 2,000 கடற்படையினரும் அதில் பயணிக்கலாம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த போர்க்கப்பல் தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்ட மேக்ரான், கொன்று தின்னிகள் காலமாகிய இந்த காலத்தில் பயங்களை எதிர்கொள்ள, நாம் வலிமையானவர்களாக இருக்கவேண்டும், குறிப்பாக கடலில் நாம் வலிமையாக இருக்கவேண்டும் என்றார்.
ஆகவேதான் பிரான்சுக்கு இப்படி ஒரு விமானம் தாங்கிக் கப்பல் வேண்டும் என முடிவு செய்தேன் என்றும் கூறியுள்ளார் மேக்ரான்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |