சொன்னதொல்லாம் பொய்... தலிபான்களுடன் இதற்கு வாய்ப்பே இல்லை! திட்டவட்டமாக அறிவித்த பிரான்ஸ்!
ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைக்கப்பட்ட தலிபான் அரசாங்கத்துக்கும் பிரான்சுக்கும் எவ்வித உறவும் இருக்காது என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருப்பவர்களை வெளியேற்றுவது குறித்து விவாதிக்க கத்தார் புறப்படுவதற்கு முன் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian இவ்வாறு கூறினார்.
தலிபான்கள் சில வெளிநாட்டினரையும் ஆப்கானியர்களையும் சுதந்திரமாக வெளியேற அனுமதிப்பதாகவும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கம் உருவாக்கப்படும் என சொன்னார்கள், ஆனால் அவர்கள் சொன்னதொல்லாம் பொய் என Jean-Yves Le Drian கூறினார்.
தலிபான் அரசாங்கத்துடன் எந்த வகையான உறவையும் அங்கீகரிக்கவோ அல்லது வைத்திருக்கவோ பிரான்ஸ் மறுக்கிறது.
தலிபான்களிடம் இருந்து நாங்கள் நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம், சரிவிலிருந்து மீள அவர்களுக்கு சில பொருளாதார வாய்ப்பு மற்றும் சர்வதேச உறவுகள் தேவைப்படும். அது அவர்களைப் பொறுத்தது.
பிரான்ஸ் ஏறக்குறைய 3,000 பேரை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றியது, இன்னும் சில பிரான்ஸ் நாட்டவர்கள் மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்துடன் தொடர்பிலிருந்த சில நூறு ஆப்கானியர்கள் அங்கு இருப்பதாக Jean-Yves Le Drian கூறினார்.