பிரான்ஸ் இந்த ஒலிம்பிக்கில் எத்தனை பதக்கங்கள் வெல்லும் தெரியுமா? உறுதியாக சொல்லும் ஜனாதிபதி மேக்ரான்
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் எத்தனை பதக்கங்களை வெல்லும் என்று அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கணித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்பட்டு, இந்த ஆண்டு இன்று மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் துவங்கியது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான ஒலிம்பிக் போட்டி, ஆரவாரம், கலை நிகழ்ச்சிகள் என அனைத்தும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த ஒலிம்பிக் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் டோக்கியாவுக்கு சென்றுள்ளார்.
டோக்கியோவுக்கு செல்வதற்கு முன்பு அவர் அங்கிருக்கும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் 40 பதக்கங்களை வெல்லும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் கடந்த ஒலிம்பிக் போட்டிகளின் அடிப்படையில் பிரான்ஸ் 17-வது இடத்தில் இருந்தது. வரும் 2024-ஆம் ஆண்டு பிரான்சில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால், அப்போது பிரான்ஸ் 5-வது இடத்தை தொடும் அளவிற்கு வந்துவிடும் என்று உறுதியாக கூறியுள்ளார்.
இந்த 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்தும் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.