பிரான்சில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி! சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
பிரான்சில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் இதுவரை பதிவான தினசரி கொரோனா பாதிப்பில் இது தான் அதிகபட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை புதிதாக 1,79,807 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. பிரான்சில் பதிவான தினசரி பாதிப்பில் இதுவே அதிகபட்சம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை நாட்டில் 2,08,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Veran தெரிவித்துள்ளார்.
நாம் இரண்டு எதிரிகளை எதிர்கொள்கிறோம், ஒன்று டெல்டா, மற்றொன்று ஒமிக்ரான்.
டெல்டா மாறுபாட்டில் ஏற்பட்ட அழுத்தத்தை மருத்துவமனைகள் சந்தித்து வருகின்றன, பருவகால காய்ச்சல் சுகாதார சேவைகளை மேலும் சிக்கலாக்கும் என்றும் சுகாதார அமைச்சர் Olivier Veran எச்சரித்துள்ளார்.