பிரான்சில் போதைப் பொருளாக பயன்படுத்தப்படும் லாபிங் கேஸ்! அதிர்ச்சி தரும் தகவல்
பிரான்சில் லாபிங் கேஸ் என அழைக்கப்படும் கேஸ் ஹில்லாரண்ட்டை போதைப் பொருளாக விற்பனை செய்து வந்த இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தற்போது இருக்கும் உலகில் போதைக்காக பல பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரான்சில் லாபிங் கேஸ் என அழைக்கப்படும் gaz hilarant-ஐ போதைப்பொருளாக இரண்டு பேர் விற்பனை செய்து வந்துள்ளனர்.
நாட்டின், 93-ஆம் மாவட்டத்தின் Rosny-sous-Bois நகரிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. இளம் வயதினரிடையே திடீரென ஆரம்பித்துள்ள இந்த பழக்கம் பெரும் ஆபத்துக்களை தரக்கூடியது. உடனடியான பரவச நிலையை தோற்றுவிக்கக்கூடிய இந்த வாயு, மருத்துவ ஆய்வுகூட உபகரணம் ஆகும். போதிய காரணங்கள் இன்றி இதனை வெளியே பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில்,
இதனை சட்டவிரோதமாக இளைஞர்களின் கைகளில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
Rosny-sous-Bois நகர பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1218 வாயு குடுவைகளும் மீட்க்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 37.000 யூரோ என்பது குறிப்பிடத்தக்கது.