ஜேர்மனியைத் தொடர்ந்து ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி தொடர்பில் பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு: பிரித்தானியா மீதான எரிச்சலை வெளிப்படுத்தும் நாடுகள்
பிரித்தானிய தயாரிப்பான ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்படுவதில் சென்றவாரம் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் பலவகையிலும் பிரித்தானியா மீது தங்கள் எரிச்சலை வெளிப்படுத்தி வருகின்றன.
முதலில், தனது நாடு 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பரிந்துரைக்கப்போவதில்லை என்று ஜேர்மனி அறிவித்திருந்தது.
இப்போது ஜேர்மனியைத் தொடர்ந்து பிரான்சும் தன் பங்கு கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
முதியவர்களைப் பொருத்தவரை, ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி கிட்டத்தட்ட செயல்படுவதேயில்லை என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதியவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த போதுமான தரவுகள் இல்லை என்று இன்று பாரீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஸ்வீடன் பிரித்தானிய தயாரிப்பான ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி அனைத்து வயதினருக்கும் ஏற்றது என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் பிரித்தானிய சுகாதாரத்துறை தலைவர்களும் தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில், தன் பங்குக்கு எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிற மாதிரி ஐரோப்பிய ஆணைய தலைவரான Ursula von der Leyen பிரித்தானியா பாதுகாப்பு குறித்த அக்கறையின்றி அவசரப்பட்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், இந்தப்பக்கம் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை குறை சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், அந்தப் பக்கம் ஐரோப்பிய மருந்துகள் ஏஜன்சி ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை அனைத்து வயதினருக்கும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.