சுத்தம் குறித்து கவலை வேண்டாம்., பிரெஞ்சு நதியில் குதித்து நீந்திய விளையாட்டு அமைச்சர்
நீரின் தூய்மை குறித்த கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கும் சீன் நதியில் குதித்து விளையாட்டு அமைச்சர் நீந்தி காட்டியுள்ளார்.
2024 ஒலிம்பிக் போட்டிகள் பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் இம்மாதம் 26-ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.
இதில், நீச்சல் போட்டிகள் போன்ற நீர் விளையாட்டுக்களை பாரிஸில் உள்ள சீன் ஆற்றில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், சீன் நதியில் மோசமான கிருமிகள் காணப்படுவதாகவும், நதி நீரின் தூய்மை குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஒடியா காஸ்டெரா (Amelie Oudea Castera) சீன் நதியில் நீந்தி, தண்ணீர் சுத்தமாக இருப்பதாகக் கூறினார்.
அமைச்சர் அமேலி நீச்சல் உடையில் ஆற்றின் பொங்கி வரும் நீரில் குதித்தார். அலெகிராண்டே இன்வாலிட்ஸ் பாலத்தின் அருகே அவர் நீந்தினார்.
[]
டோக்கியோ 2020-இல் நடந்த ஆண்களுக்கான PTS4 நிகழ்வில் தங்கம் வென்ற பாராலிம்பிக் டிரையத்லான் சாம்பியன் அலெக்சிஸ் ஹான்குவின்க்வாண்டுடன் அமெலி ஓடியா காஸ்டெரா ஆற்றில் நீந்தினார். இது தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
🚨🇫🇷FRENCH SPORTS MINISTER SWIMS IN SEINE AHEAD OF PARIS 2024 OLYMPICS
— Mario Nawfal (@MarioNawfal) July 13, 2024
French Sports Minister Amelie Oudea Castera swam in the Seine on Saturday to show the river's readiness for the Olympic swimming events.
She swam near the Alexandre III and Invalides bridges.
The Seine will… pic.twitter.com/i2z4HOCAwH
1900-இல் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின்போது, இதே சீன் ஆற்றில் தான் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Paris 2024 Olympics, France's sports minister, Amelie Oudea Castera, River Seine