உதவுவதுபோல் வந்த நபர் செய்த மோசடி: கணவனைப் பிரிந்து வாழும் கனேடிய பெண் கூறும் எச்சரிக்கை செய்தி...
கனேடிய பெண் ஒருவர் வங்கிக்கடன் செலுத்தவேண்டியுள்ளதாகக் கூறி வங்கி அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்தபோதுதான் தான் ஏமாற்றப்பட்ட விடயமே அந்தப் பெண்ணுக்குப் புரிந்தது.
நம்பிய பெண்ணை ஏமாற்றிய நபர்
கணவனைப் பிரிந்து வாழும் ஜெனிபர் (Jennifer Hiltz) என்னும் பெண், வான்கூவர் தீவிலுள்ள Nanaimo என்ற இடத்தில் சில ஆண்டுகளாக வாகனத்தில் வைத்து உணவு விற்பனை செய்துவந்துள்ளார்.
Claire Palmer/CBC
அப்போது ஒரு ஆண் வந்து அங்கு உணவு சாப்பிடத் துவங்கியுள்ளார். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த ஊருக்கு வந்ததாலும், இருவருக்கும் ஒரே வயதில் குழந்தை இருப்பதாலும், இருவரும் நண்பர்களாகியுள்ளார்கள்.
ஒருநாள், உபரி வருமானத்துக்காக உணவு விநியோகிக்கும் நிறுவனம் ஒன்றில் சாரதியாக வேலைக்குச் சேரலாம் என ஜெனிபருக்கு ஆலோசனை கூறியுள்ளார் அந்த நபர்.
அதற்காக தனது ஓட்டுநர் உரிமத்தை அப்லோட் செய்வதில் பிரச்சினை ஏற்படவே, தான் உதவுவதாகக் கூறி ஜெனிபரின் ஓட்டுநர் உரிமத்தை வாங்கிச் சென்றுள்ளார் அந்த ஆண்.
Claire Palmer/CBC
வீடு தேடி வந்த வங்கி அலுவலர்கள்
சில மாதங்களுக்குப் பின், வங்கி ஒன்றிலிருந்து அதிகாரிகள் ஜெனிபரைத் தேடி வந்துள்ளார்கள். அவர் கடன் வாங்கிய தொகையைச் செலுத்துமாறு அவர்கள் கூற, தான் கடனே வாங்கவில்லையே என்று ஜெனிபர் கூற, அப்போதுதான் நண்பர் என ஏமாற்றிய அந்த நபரின் கைவரிசை இது என்பது அவருக்குப் புரிந்துள்ளது.
அந்த நபர் இரண்டு வங்கிகளில் ஜெனிபர் பெயரில் சுமார் 95,000 டொலர்கள் கடன் வாங்கியுள்ளார்.
இப்போது, தான் கடன் வாங்கவில்லை என்பதை நிரூபிக்க படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார் ஜெனிபர்.
ஆக, இதுபோல உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு வருபவர்களை நம்பவேண்டாம் என எச்சரிக்கிறார் ஜெனிபர். இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாக கூறியுள்ள பொலிசார், ஜெனிபர் ஏமாற்றப்பட்ட விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Claire Palmer/CBC News