மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பயண திட்டம் விரிவாக்கம்; அரசு அறிவிப்பு
vetri free bus scheme expands to differently abled persons: தொலைதூர பேருந்துகளிலும் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வகையில் வெற்றிப் பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இந்த திட்டம் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பயண திட்டம்

ஏற்கனவே, சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board) மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவசப் பயணமானது, தற்போது குளிர்சாதனப் பேருந்துகள் நீங்கலாக மாநகர / நகர பேருந்துகள், விரைவு பேருந்துகள் (Express), LSS மற்றும் டீலக்ஸ் (Deluxe) பேருந்துகள், புறநகர் பேருந்துகள் (Mofussil), மலைப்பகுதி சாதாரண கட்டண பேருந்துகள் ஆகிய பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, அவர்களுடன் பயணிக்கும் ஒரு துணையாளரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.
இந்த சலுகையைப் பெறுவதற்கு, 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் இருப்பதை உறுதிப்படுத்தும், 16 இலக்க எண்ணைக் கொண்ட UDID அடையாள அட்டையைப் பயணத்தின்போது, மாற்றுத்திறனாளிகள் நடத்துனரிடம் காண்பித்து இலவச பயணத்திற்கான பயண சீட்டை பெற வேண்டும்.
இதர மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 75 சதவீத கட்டணச் சலுகை, தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.95 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், திட்ட விரிவாக்கத்திற்காக, தற்போது ரூ.7.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான புதிய உத்தரவுகள் 2026ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.