பேருந்தில் மாணவர்கள் சீருடையுடன் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 1996ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன் பின்னர் எந்த அரசு வந்தாலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பஸ் பாஸ் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

அந்தவகையில், 2026-27 கல்வியாண்டுக்கான பள்ளிகள் வரும் ஜூன் 4ஆம் திகதி திறக்கப்பட உள்ளன.
புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை காட்டி இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் பேருந்துகள் சரியாக இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |