மாணவர்களுக்கு இன்று முதல் கிடைக்கவுள்ள நன்மை
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோன்றிய மாணவர்கள் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தெரிவு செய்யப்படும் ஐயாயிரம் மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக வட்டி இல்லா கடனை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வட்டி இல்லா கடன்
இன்று முதல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலை அடிப்படையாகக் கொண்ட பாடநெறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இதற்காக போட்டித் தன்மை ஏற்பட்டால் மாணவர்களின் வெட்டுப் புள்ளிக்கு அமைய வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
வெளிப்படை தன்மையுடன் இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |