இலவச கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் சுவிஸ் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி
இலவச கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் இன்று சுவிஸ் நாடாளுமன்றத்திற்கும் அரசுக்கும் இடையில் சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பெடரல் கவுன்சில், அடுத்த மாதத்துடன் இலவச கொரோனா பரிசோதனைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்கிறது. ஆனால், கவுன்சில் உறுப்பினர்களுக்கிடையிலேயே இது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த விடயத்தில் தன் மனதை மாற்றிக்கொண்டுள்ள நிதி அமைச்சரான Ueli Maurer, இலவச கொரோனா பரிசோதனைகளை அனுமதிக்கவேண்டும் என்கிறார் இப்போது...
கவுன்சிலின் மற்ற உறுப்பினர்களோ, தடுப்பூசி பெறாதவர்களும், அறிகுறிகள் இல்லாதவர்களும் கொரோனா பரிசோதனைகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்கிறார்கள்.
இதற்கிடையில், நவம்பரில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக மக்கள் வாக்களிக்க உள்ளார்கள். எனவே, ஒரு சமரச முயற்சியாக, அரசு இலவச பரிசோதனைகளுக்கு ஒப்புதலளிக்கலாம் என்ற ஒரு கருத்து உருவாகியுள்ளது.
அதன்படி, இலவச பரிசோதனைகள் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்ற ஒரு கருத்தும், மாதம் ஒன்றிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனைகளை இலவசமாக வழங்க அரசு முன்வரலாம் என்ற ஒரு கருத்தும், மாணவர்கள் போன்ற சில குறிப்பிட்ட குழுக்களுக்கு மட்டும் இலவச பரிசோதனைகள் வழங்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகின்றன.