மில்லியன் கணக்கான அவுஸ்திரேலிய மக்களுக்கு ஒரு நாள் இலவச ரயில் பயணம்: விரிவான தகவல்
அவுஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான ரயில் சேவை ஒன்று, மேல்நிலை கம்பி பழுதடைந்து பல நாட்கள் தாமதமானதால் ஏற்பட்ட பயணிகளின் சிரமத்தை ஈடுசெய்ய கட்டணமில்லா பயணத்திற்கு வாய்ப்பளித்துள்ளது.
பயணம் இலவசம்
திங்கட்கிழமை, ஓபல் நெட்வொர்க்கில் உள்ள அனைத்து சிட்னி ரயில்கள், விமான நிலைய இணைப்பு மற்றும் மெட்ரோ சேவைகளிலும் பயணம் இலவசம்.
இந்த இலவச பயணமானது பேருந்துகள், படகுகள் மற்றும் இலகு ரயில், பிராந்திய ரயில் சேவைகள் அல்லது கோச் டிக்கெட்டுகளுக்கு பொருந்தாது, அவை வழக்கம் போல் கட்டணங்களை வசூலிக்கும்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மின் பழுது காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தை ஈடுசெய்யும் பொருட்டு NSW அரசாங்கம் சனிக்கிழமை இந்த மாற்றங்களை அறிவித்தது.
ஸ்ட்ராத்ஃபீல்ட் நிலையத்திற்கு அருகில் ரயில் தண்டவாளத்திற்கு மேலே தொங்கவிடப்பட்ட ஒரு மின்கம்பி, கடந்து செல்லும் ரயிலில் மோதியது. இதனால் மின் தடை ஏற்பட்டு லட்சக்கணக்கான பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
மில்லியனுக்கும் அதிகமான மக்கள்
புதன்கிழமை காலை சிட்னி முழுவதும் உள்ள நிலையங்களில் பயணிகள் வரிசையில் காத்திருந்தனர், மாற்று பேருந்துகளுக்காகக் காத்திருந்தனர். இதனால் நகரின் சாலைகளில் அதிகரித்த போக்குவரத்து நெரிசலால் அவர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் போக்குவரத்து அமைச்சர் ஜான் கிரஹாம் தெரிவிக்கையில், இலவச பயணத்தால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என்று கூறினார், ஆனால் கடந்த வார சிரமத்திற்கு இது ஈடுசெய்யும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |