சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு இனி இலவச சிகிச்சை - இந்திய அரசு அறிவிப்பு
சாலை போக்குவரத்து மற்றும் அதன் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், இந்தியாவில் ஆண்டுக்கு 1.78 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.
இலவச சிகிச்சை
இந்த உயிரிழப்பை குறைக்கும் நோக்கில், நாடு முழுவதும் அனைவருக்கும் பணமில்லா சிகிச்சை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் படி, இந்தியாவில் எந்த சாலைகளில் விபத்தை சந்தித்தாலும், காயமடைந்தவர்கள் விபத்து நடந்த 7 நாட்கள் வரை, ரூ.1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இலவச சிகிச்சை திட்டத்தை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார நிறுவனங்கள் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனமாக தேசிய சுகாதார ஆணையம் (NHA) இருக்கும்.
இதே போல் தமிழ்நாட்டில், நம்மைக் காக்கும் 48 என்னும் திட்டத்தை. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் 48 மணி நேரம் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |