கிடைத்தது அனுமதி: 7 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா
இலங்கைக்கு வரும் 7 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலவச விசா
அனுமதி இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய 07 நாடுகளுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், இதனடிப்படையில் விசாவை இலவசமாக வழங்குவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை உறுதி செய்யும் முகமாக அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Cabinet approved visa free to India , China , Russia , Malaysia , Japan , Indonesia and Thailand as a pilot project till 31 March with immediate effect. #visitsrilanka #srilankayoucomebackformore
— Harin Fernando (@fernandoharin) October 23, 2023
மேலும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு முன்னோடித் திட்டமான இந்த திட்டம் 2024 மார்ச் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |