தேசிய கீதம் பாடும் சுதந்திர போராட்ட வீரர்கள்! AI-யின் பிரமிக்கவைக்கும் வீடியோ
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இந்திய சுதந்திர போராட்ட வீரர்களே நேரடியாக தேசிய கீதம் பாடுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு
தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் மூலம் நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொழிநுட்பம் முன்னேறுவதற்கேற்ப நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன.
முதலில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்திரவியல், சாப்ஃட்வேர் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய கீதம் பாடும் சுதந்திர போராட்ட வீரர்கள்
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்று சுதந்திர தின விழாவையொட்டி சுதந்திர போராட்ட வீரர்கள் தேசிய கீதம் பாடுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில், சுதந்திர போராட்ட வீரர்கள் அச்சசலாக நம் கண்முன்னே வந்து போகின்றனர். சுதந்திர போராட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், சரோஜினி நாயுடு, அம்பேத்கர், மவுலானா அப்துல் கலாம் அசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அவர்களது குரலில் தேசிய கீதம் பாடுகின்றனர்.
AajTak honors the 77th Independence Day with a remarkable tribute, using AI technology to recreate the voices of our founding fathers singing the National Anthem. This initiative not only preserves history but also brings it to life, allowing us to witness the leaders in their… pic.twitter.com/xnPvgX6vIx
— Rahul Kanwal (@rahulkanwal) August 14, 2023
இது குறித்து செய்தி நிறுவனம் கூறுகையில்,"சுதந்திர தினத்தன்று சுதந்திர தின தலைவர்களை கொண்டாடவும், அவர்களை நெருங்கி காணவும் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
தற்போது, சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |