Freelancer: வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கை நிறைய சம்பளம்
பகுதி நேர வேலையின் அடிப்படையில் ஊதியம் பெறும் நபரையே Freelancer என குறிப்பிடுகிறோம்.
இவர் ஒரு நிறுவனத்தின் ஊழியர் அல்ல, பல நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்து வருமானத்தை ஈட்டும் நபர்.
ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ அல்லது குறிப்பிட்ட பணியை செய்து கொடுப்பதன் மூலமாகவோ நிறுவனம் அவருக்கு பணம் வழங்கும்.
மிக சுருக்கமாக சொல்லப்போனால் பகுதி நேர ஊழியர் அல்லது சுயாதீன ஒப்பந்தக்காரர் என குறிப்பிடலாம்.
இவ்வாறு பணிபுரியும் நபர்களை Gig Economyயின் ஒரு பகுதியாக கருதலாம்.
Freelancers யார்?
ஒரு நிறுவனத்தின் ஊழியராக அல்லாமல், குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியை சரியான நேரத்தில் செய்து கொடுக்கும் நபர்களையே Freelancers என குறிப்பிடுகிறோம்.
இவர்கள் ஒரு நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாமல் சுயாதீனமாக பணியாற்றக்கூடிய நபர்கள் ஆவார்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தின் பணிகளை பெற்றுக்கொண்டு நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ற சரியான நேரத்தில் பணியை செய்து கொடுப்பதே இவர்களது வேலையாகும்.
அதற்காக நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வருமானமாகவும் பெறுவார்கள்.
எப்படி வேலை செய்வது? என்ன செய்யலாம்?
ஒருநாளைக்கு 9 மணிநேரம் பணி என்ற கட்டாயம் இவர்களுக்கு இல்லை, தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பணியை செய்து கொடுப்பார்கள்.
ஒரு சிலர் நிறுவத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு மணிநேரத்திற்கு, ஒரு நாளைக்கு, ஒரு திட்டத்திற்கு என வருமானத்தை பெறலாம்.
உலகின் எந்தவொரு மூலையில் இருந்து நிறுவனத்திடம் இருந்து வேலையை பெறலாம்.
நீங்கள் படித்த கல்விக்கு ஏற்ப அல்லது உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகம் இருக்கிறதோ அதற்கேற்ற வேலையை பெறலாம்.
Freelancers-களுக்கு வேலையை கொடுக்கும் பல இணையதளங்கள் இருக்கின்றன, அந்த தளங்கள் பதிவு செய்து கொண்டால் யார் வேண்டுமானாலும் வேலையை தருவார்கள், அதற்கேற்ற ஊதியமும் உங்களுக்கு வழங்கப்படும்.
அவ்வாறு பதிவு செய்யும் பொழுது உங்களது திறமைகள் நிறுவனத்துக்கு எளிதில் புரியும் வண்ணம் Profileல் குறிப்பிடவும்.
உங்களுக்கு பிடித்த துறைகளில் புதுப்புது விடயங்களை/தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதும் அவசியம்.
தீமைகளும் உண்டா?
சுதந்திரமாக பணியாற்றினாலும் நிரந்தரமான வருமானம் ்இருக்காது, ஒரு மாதம் அதிகம்/ ஒரு மாதம் குறைவாக வருமானத்தை பெறலாம்.
நிறுவனம் ஊழியர்களுக்காக வழங்கும் சலுகைகளை பெறமுடியாது, உதாரணத்திற்கு காப்பீடு, ஊதியத்துடனான விடுப்பு, பணிமுடிவடையும் சூழலில் வழங்கப்படும் சலுகைகள் கிடைக்கப்பெறாது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நீங்களாகவே கற்றுக்கொள்ள வேண்டும், இதில் போட்டி அதிகம் என்பதால் உங்கள் இடத்தை வேறு யார் வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளலாம்.
குறித்த நேரத்தில் வேலையை செய்து கொடுப்பது அவசியம், ஏனெனில் உங்களை கண்காணிக்க ஆட்கள் கிடையாது, நீங்களாகவே சுயமாக திட்டமிட்டு வேலையை செய்து முடிக்க வேண்டும்.
சில நேரங்களில் பணியை செய்து கொடுத்த பின்னரும், ஊதியத்தை வழங்குவதில் தாமதம் ஏற்படலாம், அல்லது நீங்கள் ஏமாற்றப்படலாம்.
வரி செலுத்துவது எப்படி?
பணிபுரியும் நபர்களை சுயதொழில் புரியும் நபர்கள் என்றே Internal Revenue Service வகைப்படுத்துகிறது, எனவே வருவான வரி செலுத்துவது ஒவ்வொரு Freelancersன் கடமையாகும்.
இவர்கள் காலாண்டு தவணைகளில் முன்கூட்டியே மதிப்பிடப்பட்ட வரியை செலுத்த வேண்டும், சுய வேலைவாய்ப்பு வரியையும் செலுத்த வேண்டும்.
இவர்களது ஊழியர்(Employee) மற்றும் நிறுவனம்(Employer) என இருப்பதால் மொத்தமாக 12.4 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும், 2024ம் ஆண்டில் இவர்களது ஆண்டு வருமானத்திற்கான வரம்புத்தொகை $168,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.