பிரான்ஸ் நாட்டு வாகனத்தை தடுத்து நிறுத்திய சுவிஸ் பொலிசார்: தெரியவந்த உண்மை
சுவிட்சர்லாந்தில், பொலிஸ் வாகனம் போல பளிச்சிடும் நீல விளக்குகளுடன் வந்த வாகனம் ஒன்றை பொலிசார் தடுத்து நிறுத்தினார்கள்.
தெரியவந்த உண்மை
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், பொலிஸ் வாகனம் போல பளிச்சிடும் நீல விளக்குகளுடன் வந்த வாகனம் ஒன்றை பொலிசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அந்த வாகனத்தின் நபர் பிளேட் பிரான்ஸ் நாட்டுடையதாக இருக்கவே, பொலிசார் அந்த வாகனத்தை சோதனையிட்டுள்ளார்கள்.

அப்போது, அந்த வாகனத்தில் பிரான்ஸ் நாட்டு சுங்க அதிகாரிகள் இருந்தது தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தில் நடைபெற்ற பயிற்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்து அதிகாரிகள், போக்குவரத்து விதிகள் விடயத்தில் கடும் கட்டுப்பாடாக நடந்துகொள்பவர்கள்.
ஆக, அவசரம் எதுவும் இல்லாத நிலையிலும், அந்த பிரான்ஸ் நாட்டு சுங்க அதிகாரிகள் பொலிஸ் வாகனத்தைப்போல பளிச்சிடும் நீல நிற விளக்குகளை ஒளிரவைத்தவண்ணம் பயணித்ததால் அவர்களை சுவிஸ் பொலிசார் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
அவர்கள் பிரான்சில் சுங்க அதிகாரிகளாகவே இருந்தாலும், சுவிட்சர்லாந்தில் பயணிக்கும்போது மற்ற சாதாரண பயணிகளைப்போலவே அவர்களும் விதிகளை முறையாகப் பின்பற்றவேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை அனுப்பிவைத்துள்ளார்கள் சுவிஸ் பொலிசார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |