மறைந்த பிரித்தானிய மகாராணியாரை கௌரவிப்பதற்காக பிரான்ஸ் செய்யவிருக்கும் செயல்
மறைந்த பிரித்தானிய மகாராணியாரான இரண்டாம் எலிசபெத்தை கௌரவிப்பதற்காக, விமான நிலையம் ஒன்றிற்கு அவரது பெயரை சூட்ட இருக்கிறது பிரான்ஸ் நாடு.
பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைத்த விமான நிலையம்
வட பிரான்சிலுள்ள Le Touquet நகரில் அமைந்துள்ள அந்த விமான நிலையம், 1930ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1950களில் அது பிரித்தானியாவையும் பிரான்சையும் இணைக்கும் வலிமையான பாலமாக அமைந்திருந்ததாம்.
மகாராணியார் ஒரு சிறுமியாக இருக்கும்போது, தனது உறவினரான இளவரசர் எட்டாம் எட்வர்டுடன் அங்கு வந்து சென்றதுண்டாம்.
Pic: AP
மன்னருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து, சொல்லப்போனால், மகாராணியார் மறைந்து ஆறு நாட்களே ஆன நிலையில், அவரது அசாதாரண வாழ்வை கௌரவிக்கும் வகையில் இந்த விமான நிலையத்துக்கு மகாராணியாரின் பெயரை வைப்பதற்கு பக்கிங்காம் அரண்மனையிடம் அனுமதி கோரியுள்ளார்கள் Le Touquet நகர அதிகாரிகள்.
news.sky
தற்போது மன்னர் சார்லஸ் அதற்கு அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, Le Touquet நகரில் அமைந்துள்ள விமான நிலையத்துக்கு மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் பெயர் சூட்டப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |