100 நாட்களில் 100 மாரத்தான்! 86 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் பிரெஞ்சு இளைஞர்
பிரெஞ்சு சுற்றுச்சூழல் சாகசக்காரர் ஒருவர், பருவநிலை விழிப்புணர்வை பரப்புவதற்காக 100 நாட்களில் 100 மாரத்தான் ஓட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
100 நாட்களில் 100 மாரத்தான்
தன்னை ஒரு "சுற்றுச்சூழல்-சாகசக்காரர்" என்று அழைத்துக் கொள்ளும் 30 வயது நிக்கோலஸ் வான்டெனெல்ஸ்கன் (Nicolas Vandenelsken), செப்டம்பர் 3-ஆம் திகதி முதல் தினமும் மாரத்தான் ஓடிவருகிறார். தற்போது 10 மாகாணங்களைக் கடந்துள்ள அவர் தனது 84-வது மராத்தானில் தலைநகர் பாரிஸை அடைந்தார்.
42.2 கிலோமீட்டர்கள் (26.2 மைல்கள்) அவரது மாரத்தான் திட்டம் பிரான்சின் வரைபடத்தில் இதய வடிவமைபில் அமைக்கப்பட்டுள்ளது.
Dominique Lampla
பருவநிலை விழிப்புணவு
பருவநிலை விழிப்புணர்வை ஊக்குவிக்கும் இரண்டு நிறுவனங்களில் பணிபுரியும் போது, விவசாயிகள், சங்கங்கள் மற்றும் குழந்தைகளுடன் வாண்டனெல்ஸ்கென் உரையாடியுள்ளார்.
அவர் புறப்படுவதற்கு முன் அவரது உடற்தகுதியை மருத்துவர்கள் பரிசோதித்தனர். தனது மன வலிமை மற்றும் பயிற்சியினால் தன்னால் இதை கடக்க முடிகிறது என்று வாண்டனெல்ஸ்கென் கூறியுள்ளார்.
"ஆனால், 100 நாட்களில் 100 மராத்தான்களை ஓடுமாறு நான் யாருக்கும் அறிவுறுத்த மாட்டேன், ஏனென்றால் ஐந்து அல்லது 10 ஆண்டுகளில் என் மூட்டுகளில் இதன் தாக்கத்தை உணருவேன் என எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.
Pascal Bonniere.
கோரிக்கை
பாரிய தடகள நிகழ்வுகளால் ஏற்படும் கார்பன் உமிழ்வுகள் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில் இந்த மாரத்தான் சாகசத்தை நிகழ்த்தும் அவர், டூர் டி பிரான்ஸ் போன்ற தற்போதைய விளையாட்டு உள்கட்டமைப்பை சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மருவடிவமைப்பு செய்ய வேண்டும் தான் விரும்புவதாக கோரிக்கை வைத்துள்ளார்.
அவரது 100 நாள் மாரத்தான் பயணம் டிசம்பர் 10-ஆம் திகதி வடக்கு பிரெஞ்சு நகரமான வாலன்சியன்ஸில் முடிவடையவுள்ளது.