எலிசபெத் மகாராணியை கௌரவிப்பதற்காக பிரான்ஸ் அரசு செய்துள்ள விடயம்
பிரித்தானியாவின் முந்தைய மகாராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணியை கௌரவிப்பதற்காக பிரான்ஸ் அரசு பிரான்ஸ் விமான நிலையம் ஒன்றிற்கு அவரது பெயரை சூட்டியுள்ளது.
மகாராணியை கௌரவிப்பதற்காக பிரான்ஸ் அரசு செய்துள்ள விடயம்
பிரான்சிலுள்ள Le Touquet விமான நிலையத்துக்கு இரண்டாம் எலிசபெத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இம்மாதம், அதாவது, மே மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்த விமான நிலையத்தின் புதிய பெயர்ப்பலகை திறந்துவைக்கப்பட்டது.
தற்போது அந்த விமான நிலையம், Aéroport International Le Touquet - Elizabeth II என அழைக்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், விமான நிலைய அதிகாரிகள், விமான நிலையத்துக்கு மகாராணியாரின் பெயரை வைப்பதற்கு முறைப்படி மன்னர் சார்லசிடம் அனுமதி கோரினார்கள்.
அவரிடமிருந்து அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, தற்போது அந்த விமான நிலையத்துக்கு மகாராணியார் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மகாராணி எலிசபெத் சிறு பிள்ளையாக இருக்கும்போது, தனது பெரியப்பாவான எட்டாம் எட்வர்டுடன் அடிக்கடி பிரான்சுக்கு வருவாராம். இருவரும் குதிரை அல்லது படகு சவாரியில் ஈடுபடுவார்களாம்.
அமெரிக்கப் பெண் ஒருவரை திருமணம் செய்ததால் தன் பதவியைத் துறந்த எட்வர்ட், தனது மரணம் வரை பிரான்சில்தான் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |