பிரான்ஸ் தூதர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவு: நைஜர் ராணுவ அரசு நடவடிக்கை
நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம், 48 மணி நேரத்திற்குள் பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
காரணம் என்ன?
பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதற்கான காரணங்கள், நைஜர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் விளக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தூதரான Sylvain Itté, வெள்ளிக்கிழமை, நைஜரின் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பிற்கான அழைப்பிற்கு பதிலளிக்க மறுத்ததால், அவரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பிரான்ஸ் அரசின் நடவடிக்கைகள், நைஜர் நாட்டின் கொள்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் அந்த அறிகையில் கூறப்பட்டுள்ளது.
நைஜர் ராணுவம், ஜூலை மாதம் 26ஆம் திகதி, நாட்டின் ஜனாதிபதி Mohamed Bazoumஇன் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |