பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரபல ஐரோப்பிய நாடு.. தொடரும் ஐரோப்பிய ஒன்றிய விரோத போக்கு!
ஐரோப்பிய நாடான பெலாரஸ் அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டதை தொடர்ந்து பிரான்ஸ் தூதர் அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
அக்டோபர் 18 திகதி திங்கட்கிழமைக்குள் பெலாரஸ்-க்கான பிரான்ஸ் தூதர் Nicolas de Lacoste நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அக்டோபர் 17ம் திகதியே Nicolas de Lacoste பெலாரஸை விட்டு வெளியேறியதாக தூதரக செய்தித்தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், பெலாரஸை விட்டு வெளியேறிய Nicolas de Lacoste, பெலாரஸ் மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்று பதிவு செய்துள்ளார், அந்த வீடியோ தூதரக இணையதளத்தில் வெளியிடப்படும் என தூதரக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
57 வயதான Nicolas de Lacoste, கடந்த ஆண்டு பெலாஸ் நாட்டிற்கான பிரான்ஸ் தூதராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிட்த்தக்கது.
Nicolas de Lacoste, பெலராஸ் ஜனாதிபதி Alexander Lukashenko-வுக்கு நற்சான்று வழங்க தவறிவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
1994 ஆம் ஆண்டு பெலராஸின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்ற Alexander Lukashenko, 27 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டு ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெலராஸில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 6வது முறையாக Alexander Lukashenko வெற்றிப்பெற்றார்.
ஆனால், அத்தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
மற்ற ஐரோப்பிய நாடுகள் போலவே பிரான்சும் , ஜனாதிபதி தேர்தலில் 6வது முறையாக Alexander Lukashenko பெற்ற வெற்றியை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.