30 இளம்பெண்களை வீட்டுக்கு வரவழைத்த பிரான்ஸ் தூதர்: பகீர் குற்றச்சாட்டு
பிரான்ஸ் தூதர் ஒருவர் பெண்களை தவறாக பயன்படுத்திக்கொண்டதாக அவர் மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பழங்காலத்து மன்னர்கள் இளம்பெண்களை அந்தப்புரத்துக்கு வரவழைப்பதுபோல நடந்துகொண்டுள்ளார் பிரான்ஸ் தூதர் ஒருவர்.
30 இளம்பெண்களை...
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கான பிரான்ஸ் நாட்டு தூதராக இருப்பவர் புரூனோ ஃபவுச்சர் (Bruno Foucher, 65).

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், 20 முதல் 30 வயது வரையுள்ள சுமார் 30 பெண்களை புரூனோ தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரவழைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்களில் சிலர், அவர் வீட்டில் இரவை செலவிட்டுள்ளார்கள்.
தான் அந்தப் பெண்களில் சிலருடன் உடல் ரீதியாக நெருக்கமாக இருந்ததை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள உண்மைகளைத் தொடர்ந்து, புரூனோ மீது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |