நைஜர் நாட்டில் முகாமிட்டிருக்கும் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் தொடர்பில் ராணுவம் தெரிவித்துள்ள தகவல்
நைஜர் நாட்டில் முகாமிட்டிருக்கும் பிரான்ஸ் ராணுவ வீரர்கள், இந்த வாரம் முதல், அந்நாட்டிலிருந்து திரும்ப அழைக்கப்பட இருப்பதாக பிரான்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.
நைஜர் நாட்டில் முகாமிட்டிருக்கும் பிரான்ஸ் ராணுவ வீரர்கள்
ஜூலை மாதம் 26ஆம் திகதி, நைஜர் நாட்டின் ஆட்சியை அந்நாட்டின் ராணுவம் கைப்பற்றியது. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த Mohamed Bazoum கைது செய்யப்பட்டு, அவரும் அவரது குடும்பத்தினரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
The Northern Daily Leader
நைஜர் நாட்டின் Sahel என்னும் பகுதியில் இஸ்லாமிய போராளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்காக, பிரான்ஸ் ராணுவ வீரர்கள் சுமார் 1,500 பேர் நைஜர் நாட்டின் தலைநகரமான Niameyக்கு அருகே முகாமிட்டுள்ளனர்.
பிரான்ஸ் ராணுவம் தங்கள் நாட்டில் முகாமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நைஜர் தலைநகர் Niameyக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் ராணுவ தளம் முன்பு, ஆட்சிக் கவிழ்ப்பு ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவந்த நிலையில், தனது வீரர்களை திரும்ப அழைத்துக்கொள்ள இருப்பதாக சென்ற மாதம் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கூறியிருந்தார்.
Apa.az
பிரான்ஸ் ராணுவ வீரர்கள் தொடர்பில் ராணுவம் தெரிவித்துள்ள தகவல்
இந்நிலையில், நைஜர் நாட்டில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள், இந்த வாரம் முதல், திரும்ப அழைத்துக்கொள்ளப்பட இருப்பதாக பிரான்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.
நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதரும் ஏற்கனவே பிரான்ஸ் திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |