மூன்று பிள்ளைகளால் ராஜ குடும்பத்துக்கு ஆபத்து: பிரெஞ்சு ஜோதிடரின் அதிரவைக்கும் கணிப்பு
பிரான்சில் பிறந்த ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் 'Les Propheties'. 1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என ஏராளமான விடயங்களை கணித்து எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ்.
நாஸ்ட்ரடாமஸின் புத்தகம் வெளியாகி 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னமும் அவர் கணித்துள்ள விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
(Image: Getty Images)
அவ்வகையில், பிரித்தானிய ராஜ குடும்பத்தைக் குறித்து அவர் கூறியுள்ள மற்றொரு அதிரவைக்கும் விடயம், தற்போது மக்களிடையே மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கிவருகிறது.
அதிர்ச்சியை உருவாக்கிய முதல் செய்தி
நாஸ்ட்ரடாமஸின் செய்தி ஒன்றிற்கு விளக்கமளித்த நிபுணரான Mario Reading என்பவர், டயானாவை சார்லஸ் பிரிந்ததால் அவர் மீது மக்களுக்கு இன்னமும் வெறுப்பு உள்ளது என்றும், ஆகவே, அவர் தன் பதவியைத் துறக்க நேரிடும் என்றும், அதற்குப் பின், மன்னராவார் என சற்றும் எதிர்பார்க்காத ஒருவர் சார்லசின் இடத்தில் பிரித்தானியாவின் மன்னராக பதவியேற்பார் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதாக தெரிவித்திருந்த விடயம் பிரித்தானியர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியது.
(Image: Getty Images)
காரணம், அந்த எதிர்பாராத நபர் ஹரியாக இருக்கலாம் என்று சிலரும், தன்னை மன்னருடைய ரகசியக் குழந்தை என்று கூறிக்கொள்ளும் அவுஸ்திரேலியரான Simon Dorante-Dayயாக இருக்கலாம் என சிலரும் எண்ணுகிறார்கள்!
இரண்டாவது பயங்கர செய்தி
இதற்கிடையில், ராஜ குடும்பத்தைக் குறித்து நாஸ்ட்ரடாமஸ் கணித்ததாக கூறப்படும், இதுவரை வெளிவராத ஒரு பயங்கர செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், போரின் முடிவில், அதிகார மாற்றங்கள் ஏற்படும், கடற்கரையருகே மூன்று அழகான பிள்ளைகள் பிறப்பார்கள், அவர்கள் பருவம் எய்தியதும் மக்களுக்கு அழிவு ஏற்படும், நாட்டின் அரசில் அதற்குப் பிறகு முன்னேற்றம் காணாது என எழுதிவைத்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.
Image: Getty Images
அவர் குறிப்பிடும் அந்த மூன்று பிள்ளைகள், இளவரசர்கள் வில்லியம், ஹரி மற்றும் இளவரசி பீட்ரைஸ் என விளக்கமளிக்கிறார் ஒருவர்.
ஆனால், இந்த செய்தி குறித்து மக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இளவரசி பீட்ரைஸ் 2006ஆம் ஆண்டே 18 வயதை எட்டிவிட்டார். ஆனால், நாஸ்ட்ரடாமஸ் கூறியதுபோல் ஒன்றும் நடக்கவில்லையே என்கிறார் ஒருவர். மற்றொருவரோ, நாஸ்ட்ரடாமஸ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார், அதற்கு அர்த்தம் கூறுபவர்கள்தான் வெவ்வேறு விதமாக அர்த்தம் கூறுகிறார்கள் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |