2024ஆம் ஆண்டைக் குறித்த பிரான்ஸ் ஜோதிட நிபுணரின் கணிப்புகள்
பிரான்சில் பிறந்தவரான ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் Les Propheties. 1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என 942 விடயங்கள் குறித்து கணித்து எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ்.
நாஸ்ட்ரடாமஸின் புத்தகம் வெளியாகி 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னமும் அவர் அடுத்த ஆண்டைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என எதிர்பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
2024ஆம் ஆண்டைக் குறித்த நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள்
மன்னராகும் ஹரி
ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ், தனது புத்தகத்தில், தீவுகளின் மன்னர் துரத்தப்படுவார் என்று எழுதியுள்ளார். அது மன்னர் சார்லசைக் குறித்தது என சிலர் நம்புகிறார்கள்.
மன்னராவார் என எதிர்பார்க்கப்படாத ஒருவரால் மன்னர் தனது பதவியை இழப்பார் என்று கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ். இளவரசர் வில்லியம் அடுத்து அரியணையேறுபவர் என்னும் நிலையில், மன்னராவார் என எதிர்பார்க்கப்படாத ஒருவர் எனறு நாஸ்ட்ரடாமஸ் கூறுவது இளவரசர் ஹரியைத்தான் என்கிறார்கள் சிலர்.
சீனாவுடன் போர்?
கடல்வழி மற்றும் தரைவழிப் போர் ஒன்று நடக்கும் என்றும், சிவப்பு எதிரி பயந்தால் வெளிறிப்போவான் என்றும் கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ். அவர் சிவப்பு எதிரி என்று கூறுவது சீனாவைத்தான் என்கிறார்கள் அவரை நம்புபவர்கள்.
பருவநிலை பேரழிவு
வறண்ட பூமி மேலும் வறண்டுபோகும், அதன் பிறகு பெருவெள்ளங்கள் ஏற்படும் என்று கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.
அத்துடன், கடுமையான வெப்பம், பசி ஆகிய பிரச்சினைகளையும் உலகம் எதிர்கொள்ளும் என்றும் கணித்துள்ளார் அவர்.
புதிய போப்பாண்டவர்
புதிதாக போப் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கணித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ். உடல் நல பாதிப்பு காரணமாக பழைய போப் ஒருவர் இறக்க, புதிதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தனது 87ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய போப் பிரான்சிஸ்க்கு, பல உடல் நல பிரச்சினைகள் உள்ளன. நுரையீரல் அழற்சி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சமீபத்தில் அவர் ஐ.நா பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |