தன் தாய்க்காக ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறும் சாதனை படைத்த பிரான்ஸ் நாட்டு இளம்பெண்
பிரான்ஸ் நாட்டு தடகள வீராங்கனை ஒருவர், பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி, சாதனை ஒன்றை முறியடிக்கும் முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.
ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறும் சாதனை
Anouk Garnier (34) என்னும் தடகள வீராங்கனை, கயிறு மூலம் ஈபிள் கோபுரத்தில் 361 அடி, அதாவது, 110 மீற்றர் ஏறி, சாதனை ஒன்றைப் படைத்தார். அவர் அந்த சாதனையை, எதிர்பார்த்ததைவிட இரண்டு நிமிடங்கள் முன்னதாகவே, அதாவது, 18 நிமிடங்களில் முடித்தார்.
SARAH MEYSSONNIER / REUTERS
இதற்கு முன், இதேபோல, கயிறு மூலம் உயரமான ஒரு கட்டிடத்தில் ஏறிய பெண் என்னும் சாதனையை Ida Mathilde Steensgaard என்னும் நெதர்லாந்து பெண் படைத்திருந்தார். அவர், 2022ஆம் ஆண்டு, Copenhagen ஓபரா இல்லத்தில் 85 அடி, அதாவது 26 மீற்றர் உயரம் ஏறி சாதனை படைத்திருந்தார்.
SARAH MEYSSONNIER / REUTERS
தற்போது, அந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஈபிள் கோபுரத்தில் 361 அடி, அதாவது, 110 மீற்றர் உயரத்துக்கு கயிறு மூலம் ஏறியுள்ளார் Anouk.
SARAH MEYSSONNIER / REUTERS
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆதரவுக்காக இந்த சாதனையைப் படைத்தார் Anouk. Anoukஇன் தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்காகவும் Anouk இந்த சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |