பிரித்தானியாவிடம் பணம் வாங்கிக்கொண்டு புலம்பெயர்வோரை முரட்டுத்தனமாக நடத்தும் பிரான்ஸ் அதிகாரிகள்
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்வோரில் ஒரு பெரும் கூட்டத்தினர் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுடன் கைகோர்த்தது பிரித்தானிய அரசு.
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துவதற்காக பிரான்ஸ் அரசுக்கு பல மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன, கொடுக்கப்படவும் உள்ளன.
புலம்பெயர்வோரை முரட்டுத்தனமாக நடத்தும் பிரான்ஸ் அதிகாரிகள்
வாங்கிய பணத்துக்கு வேலை செய்யும் பிரான்ஸ் அதிகாரிகள், புலம்பெயர்வோரை முரட்டுத்தனமாக அணுகும் சில காட்சிகள் வெளியாகியுள்ளன.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், புலம்பெயர்வோர் சுமார் 25 பேர் ஒரு சிறுபடகில் பயணிக்க, பிரான்ஸ் பொலிஸ் ரோந்து படகொன்று அந்த சிறுபடகை சுற்றி சுற்றி வருவதைக் காணலாம்.
Pic: PA
பொலிசாரின் படகு வேண்டுமென்றே அந்த சிறுபடகின் அருகே வேகமாக வந்து மோதுவது போல் திரும்ப, அதனால் எழும் அலைகளால் புலம்பெயர்வோர் படகு தள்ளாடுகிறது. அது கவிழவும் கூடும்.
மேலும், மற்றொரு வீடியோவில் புலம்பெயர்வோர் படகை நெருங்கும் பிரான்ஸ் பொலிசார், பெரிய பெப்பர் ஸ்பிரே கேன் ஒன்றைக் காட்டி புலம்பெயர்வோரை மிரட்டுவதைக் காணலாம்.
அவர்கள் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் உயிரிழக்கும் அபாயத்தைத் தடுப்பதற்காகவே இப்படி செய்வதாக விளக்கமளித்தாலும், அவர்களுடைய இந்த முரட்டுத்தனமான அணுகுமுறையே புலம்பெயர்வோர் படகைக் கவிழ்க்கும் அபாயம் உள்ளதை வீடியோக்கள் காட்டுவதை மறுப்பதற்கில்லை.
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |