பிரான்சில் புதிய சட்டம் அமுல்! இன்று முதல் இதற்கு தடை
பிரான்சில் காய்கறிகள் மற்றும் பழங்களை பிளஸ்டிக்கில் பேக்கேஜ் செய்ய தடை விதிக்கும் புதிய சட்டம் புத்தாண்டு இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
2022 ஜனவரி 1 முதல் வெள்ளரி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட 30 வகைகளான காய்கறிகள், பழங்களை பிளாஸ்டிக்கில் பேக்கேஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரிய பேக்கேஜ் மற்றும் நறுக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட பழங்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இது ஒரு உண்மையான புரட்சி என குறிப்பிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன், 2040-க்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற நாட்டின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது என கூறினார்.
பிரான்சில் மூன்றில் ஒரு பங்கு பழம் மற்றும் காய்கறி பொருட்கள் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் விற்கப்படுகிறது.
இந்த தடை மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியும் என்று அரசாங்க அதிகாரிகள் நம்புகின்றனர்.