பிரான்சில் இரத்த வங்கிகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல்
Hackers Raise Temperatures in French Blood Storage Refrigerators: ஹேக்கர்கள், பிரான்சிலுள்ள இரத்த வங்கிகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நிகழ்த்தியுள்ளார்கள்.
திங்கட்கிழமை இரவு, பிரான்சில் இரத்த வங்கிகளைக் குறிவைத்துள்ளார்கள் ஹேக்கர்கள்.
இரத்த வங்கிகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல்
சமீபத்தில், பிரான்ஸ் துவங்கி பல்வேறு நாடுகளிலுள்ள உணவுப்பொருட்கள் சேகரித்து வைக்கும் குளிர் சாதன அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட விடயம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் மற்றொரு விடயம் பிரான்சில் நிகழ்ந்துள்ளது.

ஆம், இரத்த வங்கிகளில், இரத்த தானம் செய்பவர்களின் இரத்தம் சேகரித்துவைக்கப்படும் குளிர் சாதன அமைப்புகள் மீது, திங்கட்கிழமை இரவு சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக Le Canard Enchaîné என்னும் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை பிரெஞ்சு ஊடகங்கள் பல உறுதி செய்துள்ளன. இரத்தம் சேகரித்துவைக்கப்பட்டிருந்த குளிர் சாதனப்பெட்டிகளின் வெப்பநிலை, மைனஸ் 30 டிகிரி செல்ஷியஸாக இருக்கும் நிலையில், அதை 110 டிகிரி செல்ஷியஸாக உயர்த்தியுள்ளனர் ஹேக்கர்கள்.
நல்ல வேளையாக, இந்த விடயம் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
