தந்தை ஒருவரின் கொடுஞ்செயலால்... பிரெஞ்சுச் சிறுவனுக்கு கிடைத்த வாழ்நாள் தண்டனை

Crime
By Arbin Apr 12, 2026 06:13 AM GMT
Report

கிழக்கு பிரான்சிலுள்ள ஹேகன்பாக் கிராமத்தில், தனது தந்தையின் வாகனத்திற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவன் ஒருவனை பிரெஞ்சு காவல்துறை மீட்டுள்ளது.

நவம்பர் 2024 முதல்

கடந்த நவம்பர் 2024 முதல் குறித்த சிறுவன் அந்த வாகனத்திற்குள் பூட்டி வைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளான். நீண்டகாலச் சிறைவைப்பின் காரணமாக நடக்கும் திறனை இழந்த நிலையிலும், அச்சிறுவன் நிர்வாணமாகவும் கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடனும் மீட்கப்பட்டுள்ளான்.

தந்தை ஒருவரின் கொடுஞ்செயலால்... பிரெஞ்சுச் சிறுவனுக்கு கிடைத்த வாழ்நாள் தண்டனை | French Boy Locked Father Van

வேனை வலுக்கட்டாயமாகத் திறந்த நிலையில், குப்பைக் குவியலின் மீதும் மலத்திற்கு அருகிலும், போர்வையால் மூடப்பட்ட நிலையில், நிர்வாணமாகவும் படுத்திருந்த சிறுவனை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

வெளியான தகவலின் அடிப்படையில், அந்தச் சிறுவன் நவம்பர் 2024 முதல் வாகனத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளான். சிறுவனைக் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​நிர்வாணமாகவும், கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடனும் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து அமர்ந்த நிலையிலேயே இருக்கக் கட்டாயப்படுத்தப்பட்டிருந்ததால், சிறுவனால் இனி நடக்க இயலாத நிலையிம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை

அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை

வேனிலிருந்து சிறார் ஒருவரின் சத்தம் கேட்டதாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் புகார் தெரிவித்ததை அடுத்து, அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். அந்த வாகனம், சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனியின் எல்லைகளுக்கு அருகிலுள்ள ஹேகன்பாக் என்ற கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சிறுவனின் தந்தையிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, தனது துணைவியிடமிருந்து சிறுவனைப் பாதுகாப்பதற்காகவே அவனை அடைத்து வைத்திருந்ததாக அதிகாரிகளிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடையப் பெண்மணி அந்தச் சிறுவனை ஒரு மனநல மருத்துவமனையில் ஒப்படைக்க கட்டாயப்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும், சிறுவனுக்கு ஏதேனும் உளவியல் பாதிப்பு இருந்ததற்கான மருத்துவ ஆதாரம் எதுவும் இல்லை என்று அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சிறைவைப்பு

இதனிடையே, பிரெஞ்சு ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில், சிறுவனுக்கு அவன் தந்தை ஒரு நாளைக்கு இருமுறை உணவு கொண்டு வந்து கொடுத்ததுடன், வேனுக்குள் தண்ணீர் போத்தல்களையும் வைத்துச் சென்றிருக்கிறார்.

அந்தச் சிறுவன் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குப்பைப் பைகளில் மலம் கழிக்க நிர்பந்திக்கப்பட்டதாகவும், 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ஒருமுறைக் கூட குளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தந்தை ஒருவரின் கொடுஞ்செயலால்... பிரெஞ்சுச் சிறுவனுக்கு கிடைத்த வாழ்நாள் தண்டனை | French Boy Locked Father Van

தற்போது சிறுவனின் தந்தை மீது கடத்தல், சட்டவிரோத சிறைவைப்பு மற்றும் சிறாருக்குப் பராமரிப்பு, உணவு மறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சிறுவன் வேனில் சிறை வைக்கப்பட்டிருந்தது தனக்குத் தெரியாது என அவரது துணைவி மறுத்துள்ளார், ஆனால் ஆபத்தில் உள்ள சிறுவனுக்கு உதவத் தவறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US