பிரித்தானியாவில் 10வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன்: குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை
பிரித்தானியாவில் 10வது மாடி கட்டிடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிருக்கு ஆபத்தான காயங்களை அடைந்தும் அதிர்ஷ்டவசமாக மீண்டும் புத்துயிர்ப்பு பெற்றுள்ளார்.
மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன்
பிரித்தானியாவில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டேட் மாடர்ன் ஆர்ட் கேலரியின் 10வது மாடியில் இருந்து சிறுவன் ஒருவர் தூக்கி வீசப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பிரெஞ்சு சிறுவனுக்கு இந்த சம்பவத்தின் போது 6 வயது என்றும், 100அடி(30மீ) உயரத்தில் இருந்து விழுந்த சிறுவனுக்கு மூளையில் இரத்த கசிவு மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற உயிருக்கு சவாலான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளான்.
பிரெஞ்சு சிறுவனை தாக்கியவர் ஜான்டி பிரேவரி ஆட்டிஸ்டிக் டீனேஜர் ஆவார், ஆதரவு விடுதியில் வசித்து வந்த அவர் 2019ம் ஆண்டு சிறுவனை தாக்கிய போது எத்தகைய மேற்பார்வையும் இல்லாமல் வெளியே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின் 2020ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் ஜான்டி பிரேவரி குற்றம் சுமத்தப்பட்டு 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மறுவாழ்வுக்கு திரும்பும் சிறுவன்
பாதிக்கப்பட்ட பிரெஞ்சு சிறுவன் தற்போது புத்துயிர்ப்பு பெற்று தனது புதிய வாழ்வுக்கு திரும்பி வருகிறார்.
ஆறு மாதங்கள் வரை உயிர் காக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது அவரே குனிந்து பொம்மைகளை எடுக்கிறார், அலமாரியில் இருந்து ஆடைகளை எடுத்துக் கொள்கிறார்.
தன்னுடைய சக்கர நாற்காலியில் நீண்ட பயணங்களில் பங்கெடுக்கிறார். எனவே அவருடைய சக்கர நாற்காலி எளிதாக பயணிக்கும் வகையில் வீட்டை மாற்றியமைத்து மறுசீரமைக்கிறோம் என அவருடைய பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |