இந்திய விமானப்படை இழந்த ஒரேயொரு Rafale, அதுவும்... பிரான்ஸ் அதிகாரப்பூர்வ உறுதி
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா ஒரே ஒரு Rafale விமானத்தை இழந்ததாக பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மே 2025-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது, இந்திய விமானப்படை (IAF) தனது ரஃபேல் போர்விமானங்களில் ஒன்றை இழந்துள்ளதாக பிரான்ஸ் விமானப்படை தளபதி ஜெரோம் பெலாங்கர் (Jerome Bellanger) உறுதிப்படுத்தியுள்ளார்.
இது, ரஃபேல் விமானம் போரில் இழந்த முதலாவது சம்பவமாகும்.
Dassault Aviation நிறுவனத்தின் தலைவர் எரிக் டிராபியர், இந்த இழப்பு அதிக உயரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பத் கோளாறால் ஏற்பட்டதாகவும், எதிரியின் தாக்கம் இல்லை என்றும் விளக்கினார்.
பாகிஸ்தானின் பொய்யான பிரசாரம்:
பாகிஸ்தான் விமானப்படை PL-15E ஏவுகணைகள் மூலம் 3 ரஃபேல்களை சுட்டு வீழ்த்தியதாக பரப்பிய செய்தி எந்த ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்பட்டது.
இந்த தகவலை சீனாவும் ஆதரிக்க, ரஃபேல் விமானத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக மாறியது.
இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது?
பிரான்ஸ் தளபதியின் கூற்றுப்படி, இந்தியா ஒரு ரஃபேல், ஒரு சுகோய், மற்றும் ஒரு மிராஜ் 2000 ஆகிய மூன்று விமானங்களை இழந்தது.
ஆனால் இந்திய அரசு இதுவரை முழுமையான எண்ணிக்கையை உறுதி செய்யவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் "சில விமானங்கள்" இழந்ததாக மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் இழப்புகள்:
இந்தியாவின் அதிகாரப்பூரவமற்ற தகவல்களின்படி, பாகிஸ்தான் மூன்று JF-17, இரண்டு Mirage III/V, ஒரு F-16 Block 52, ஒரு C-130 Hercules போக்குவரத்து விமானம் மற்றும் ஒரு Saab Erieye-2000 AEW&C உள்ளிட்ட விமானங்களை பாகிஸ்தான் இழந்ததாக கூறப்படுகிறது.
சீனாவின் டிஜிட்டல் தாக்குதல்:
ரஃபேல் விமானத்திற்கு எதிராக சீனா எதார்த்தமற்ற விளம்பரங்கள் மற்றும் AI உருவாக்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் தவறான செய்திகள் பரப்பியதாக பிரான்ஸ் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.
இது J-10C விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IAF Rafale loss confirmation, French Air Force Rafale statement, India Pakistan air clash 2025, Dassault Rafale technical failure, Operation Sindoor aircraft loss, Pakistan J-10C PL-15E missiles, Rafale vs J-10C fighter jet debate, China disinformation Rafale campaign, French Rafale export reputation, Indo-Pak Air War 2025 update