சட்டவிரோதமாக தங்கம் எடுப்பதை எதிர்த்து போராடிய பிரெஞ்சு தலைமை மார்ஷல் சுட்டுக்கொலை! மேக்ரான் வெளியிட்ட பதிவு
தென் அமெரிக்காவில் சட்டவிரோத தங்கச் சுரங்க நடவடிக்கையின்போது பிரெஞ்சு காவலர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்சு கயானா
பிரெஞ்சு கயானா என்பது பிரான்சின் ஒரு பகுதியாகும். இங்கு 2022ஆம் ஆண்டில், பிரெஞ்சு அதிகாரிகள் கயானா காட்டில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்திற்கு எதிராக 1,000க்கும் மேற்பட்ட ரோந்துகளை மேற்கொண்டனர்.
அப்போது 59 கிலோகிராம் (130 பவுண்டுகள்) பாதரசம் மற்றும் ஐந்து கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது என உள்ளூர் அதிகாரிகளின் அறிக்கை கூறியது.
@Jody Amiet, AFP
தலைமை மார்ஷல் சுட்டுக்கொலை
இந்த நிலையில், சட்டவிரோத தங்கச் சுரங்கத்திற்கு எதிரான நடவடிக்கையில் GIGN எனும் பிரெஞ்சு பொலிஸார் ஈடுபட்டனர். அந்த சமயம் Arnaud Blanc என்ற பிரெஞ்சு காவலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
@Reuters
பிரான்ஸ் ஜனாதிபதி இரங்கல்
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வெளியிட்ட பதிவில், 'கயானாவில் சட்டவிரோதமாக தங்கம் எடுக்கப்படுவதை எதிர்த்துப் போராடும் பணியில் GIGN காவலர், தலைமை மார்ஷலுமான Arnaud Blanc சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது தைரியத்தையும், அர்ப்பணிப்பையும் நான் உணர்ச்சியுடன் வணங்குகிறேன். அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தோழர்களுக்கு எனது அனுதாபங்கள்' என தெரிவித்துள்ளார்.
En mission de lutte contre l’orpaillage illégal en Guyane, gendarme du GIGN, le Maréchal des logis-chef Arnaud Blanc est tombé sous le feu. Je salue avec émotion son courage et son engagement. Mes condoléances à sa compagne et ses deux enfants, à sa famille et ses camarades.
— Emmanuel Macron (@EmmanuelMacron) March 25, 2023
@Reuters Photo
மேலும் அவர், கயானாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடருமாறு அரசங்க அமைச்சகங்களை கேட்டுக் கொண்டார். உள்ளூர் சுரங்க ஆபரேட்டர்கள் கூறுகையில், 'Garimpeiros என்று அழைக்கப்படும் அங்கீகரிக்கப்படாத தங்கச் சுரங்க தொழிலாளர்களால் ஒவ்வொரு ஆண்டும் 10 டன் தங்கம் பிரெஞ்சு கயானாவில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தெடுக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளனர்.
@Reuters