பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி
பிரான்ஸ் நாட்டைவிட்டு ஒரு தரப்பினர் வெளியேறுவதைக் குறித்த அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்
சமீப காலமாக, நன்கு படித்தவர்களாகிய, பிரான்ஸ் குடிமக்களான, இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பின்னணி கொண்ட ஏராளமானோர், பிரான்சைவிட்டு அமைதியாக வெளியேறியுள்ளது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
காரணம் என்ன?
Ophélie Rizki என்னும் பெண், 2019ஆம் ஆண்டு பிரான்சை விட்டு வெளியேற வாய்ப்புக் கிடைத்ததால், அவரும் அவரது குடும்பத்தினரும் தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகிறார்கள். Rizki ஒரு பிரெஞ்சுக் குடிமகள்.
ஆனாலும், பிரான்சில் இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணிவதற்கெதிராக அரசியல்வாதிகள் தொடர்ந்து மேற்கொண்டுவந்த விவாதங்களும், பள்ளிகளில் ஹிஜாப் அணிய நாடாளுமன்றம் தடை விதித்ததும் அவரை ரொம்பவே யோசிக்கவைத்துள்ளது.
தான் வேலை செய்த அலுவலகத்தில் தன்னை யாரும் ஹிஜாப் அணியக்கூடாது என சொல்லவில்லை என்றாலும், மாறி வரும் அரசியல் சூழ்நிலை அவரை நாட்டைவிட்டே வெளியேறச் செய்துவிட்டது.
அவரைப்போலவே பலர், பிரான்ஸ் குடிமக்கள், நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களில் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் 1,074 பேர்!
மோசமாகும் நிலைமை
இந்நிலையில், தற்போது பிரான்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வலதுசாரிக்கட்சியான புலம்பெயர்தலுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட National Rally கட்சி அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.
National Rally கட்சி, பொது இடங்களில் ஹிஜாப் போன்ற விடயங்களை தடை செய்வதற்கும், சில அரசுப் பணிகளில் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்போர் பணி செய்வதை தடை செய்வதற்கும், வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள கட்சி ஆகும்.
அவர்கள் ஆட்சிக்கு வருவார்களென்றால், ஏற்கனவே பாரபட்சம் காட்டப்படுவோர் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும் என கருதுகிறார்கள் இஸ்லாமியர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |