ஒலிம்பிக் போட்டியால் இடைஞ்சல் என வேறு நாடுகளுக்குச் சென்ற பிரான்ஸ் நாட்டவர்கள் வருத்தம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால், ஏராளமான மக்கள் கூடுவார்கள், பெரும் இடைஞ்சல் என எண்ணி வேறு நாடுகளுக்குச் சென்றவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி வேறு நாடுகளுக்குச் சென்ற தங்கள் நண்பர்கள், இப்போது வருத்தப்படுவதாகத் தெரிவிக்கிறார்கள் பிரான்சில் நேரடியாக ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டு களிக்கும் சிலர்.
ஒலிம்பிக் போட்டியால் இடைஞ்சல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக, ஏராளமான மக்கள் கூடுவதால் தொல்லை என எண்ணி வேறு நாடுகளுக்குச் சென்றவர்களும் இருக்கிறார்கள்.
ஒலிம்பிக் அமைப்பாளர்கள் எப்படி ஏற்பாடுகளைச் செய்திருப்பார்களோ என்று எண்ணி, தானும் வேறு எங்காவது சென்றுவிடலாமா என நினைத்தாராம் Chantal Mansfield.
இப்போது தன் 10 வயது மகளான சாஷாவுடன் ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார் Chantal.
சைக்கிள் பந்தய வீரர்களை அருகில் பார்ப்பதும், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் பெரிய திரைகளில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதும் த்ரில் ஆக இருப்பதாக தெரிவிக்கிறார் அவர்.
ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டுகளித்து, தான் எடுத்த புகைப்படங்களை வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்ட தன் தோழிகளுக்கு அனுப்ப, அவர்கள், ஏன் பிரான்சை விட்டு வந்தோமோ என வருந்துவதாகத் தெரிவிக்கிறார் அவர்.
பாரீஸில் வாழும் Marie Heyraud, தன் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வெளிநாடு எதற்காவது சென்றுவிடலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தாராம்.
ஆனால், நல்லவேளையாக நான் போகவில்லை. ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாகக் காண்பது, வாழ்வில் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம். வெளிநாடு சென்ற என் நண்பர்கள் பலர், இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டோமே என்று இப்போது வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் Marie Heyraud.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |