இமயமலையில் 3 பிரெஞ்சு மலையேறுபவர்கள் சடலமாக மீட்பு!
நேப்பாளத்தில் இமயமலைப் பகுதியில் காணாமல் போன 3 பிரெஞ்சு மலையேறுபவர்களை தேடிச் சென்ற மீட்புப்பணிக் குழு, அவர்களின் சடலங்களைக் கண்டெடுத்துள்ளது.
நேபாளத்தில் அமைந்துள்ள இமயமலை- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போன 3 பிரெஞ்சு மலைஏறுபவர்களின் உடல்களை நேபாள மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக பொலிஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
மூவரும் 6,783 மீற்றர் (22,254 அடி) உயரம் கொண்ட காண்டேகா (Kangtega) மலையில் ஏற முயன்றனர், இது தொலைதூரத்தில் உள்ள சோலுகும்பு மாவட்டத்தில் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ளது.
அக்டோபர் 26-ஆம் திகதி, அப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதில் இருந்து அவர்கள் பயண ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை.
இந்த நிலையில் திங்கட்கிழமை, "ஒரு மலை மீட்புக் குழு அந்த பகுதியில் இருந்து மூன்று உடல்களை மீட்டுள்ளது" என்று பொலிஸ் அதிகாரி தர்கா ராஜ் பாண்டே தெரிவித்தார்.
உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்கள் காணாமல் போனதாக் சொல்லப்பட்ட பிரெஞ்சு மலையேறுபவர்கள் என உறுதி செய்யப்பட்டது.
பின்னர், எவரெஸ்ட் சிகரத்தின் நுழைவாயில் மற்றும் உலகின் மிக உயரமான மலை அமைந்துள்ள சோலுகும்பு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான லுக்லாவுக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தலைநகர் காத்மாண்டுக்கு கொண்டு வரப்படும் என்று பாண்டே கூறினார்.
Representative
எவரெஸ்ட் சிகரம் உட்பட உலகின் 14 உயரமான மலைகளில் 8 நேபாளத்தில் உள்ளது, மேலும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆர்வமிக்க மலையேறுபவர்கள் செலவிடும் சுற்றுலாவுக்கான பணமே அந்த ஏழ்மையான நாட்டிற்கு வருமானத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் வெடித்ததால் மூடப்பட்ட நேபாளத்தில் உள்ள இமயமலை சிகரங்கள், இந்த ஆண்டு வெளிநாட்டு ஏறுபவர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மலையேறுபவர்கள் படிப்படியாக திரும்பிவருகின்றனர்.