ஒரே படகில் 106 புலம்பெயர்வோர்: மீட்ட பிரான்ஸ் கடற்படை
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஒரே படகில் 106 புலம்பெயர்வோர் பயணித்துக்கொண்டிருந்தநிலையில், அந்த படகு பழுதாகியுள்ளது.
ஒரே படகில் 106 புலம்பெயர்வோர்
சனிக்கிழமை இரவு, ஆங்கிலக்கால்வாயில் புலம்பெயர்வோர் படகொன்று பழுதாகி நிற்பதாக பிரான்ஸ் கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், பழுதாகி நின்றுகொண்டிருந்த அந்த படகில் 106 புலம்பெயர்வோர் இருந்தது தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒரு பெண் உட்பட ஏழு பேர் தண்ணீரில் விழுந்த நிலையில், அவர்களை மீட்ட பிரான்ஸ் கடற்படையினர், அந்தப் பெண் சுயநினைவிழந்ததால் அவரை ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மற்ற அனைவரையும் ஏற்றிக்கொண்டு மீட்புக் கப்பல் ஒன்று Calais துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |