தீயால் பாதிக்கப்பட்ட நாட்ரிடாம் தேவாலயப் பணிகளை பொறுப்பேற்றிருந்த பிரான்ஸ் தளபதிக்கு நேர்ந்த துயரம்
தீயால் பாதிக்கப்பட்ட நாட்ரி டாம் தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்பும் பணிகளை பொறுப்பேற்றிருந்த பிரான்ஸ் முன்னாள் ராணுவத் தளபதி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
விபத்து என அறிவிப்பு
வெள்ளிக்கிழமையன்று, பிரான்ஸ் ஸ்பெயின் எல்லையில் அமைந்துள்ள Pyrenees மலையில், உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அது தீயால் பாதிக்கப்பட்ட நாட்ரி டாம் தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்பும் பணிகளை பொறுப்பேற்றிருந்த பிரான்ஸ் முன்னாள் ராணுவத் தளபதியான General Jean-Louis Georgelin (74) என்பவரது உடல் என தெரியவந்துள்ளது.
Avec le décès du général Jean-Louis Georgelin, la Nation perd l’un de ses grands soldats. La France, un de ses grands serviteurs. Et Notre-Dame, le maître d’œuvre de sa renaissance. pic.twitter.com/gxskQoQbF4
— Emmanuel Macron (@EmmanuelMacron) August 19, 2023
அவர் விபத்தில் பலியானதாக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இரங்கல்
General Jean-Louis மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நாட்ரி டாம் தனது மறுபிறப்பின் மேற்பார்வையாளரையும், பிரான்ஸ் தனது சிறந்த சேவையாளர் ஒருவரை இழந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
AFP
பாரீஸ் மேயர் உட்பட, பலர் General Jean-Louis மறைவுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |