ரயில் பாதையில் ஓடும் கார்கள்: பிரான்சின் வித்தியாசமான திட்டம்
பிரான்ஸ் நாட்டில் பல ரயில் பாதைகள் பயன்பாட்டில் இல்லாமல் சும்மா கிடக்கின்றன.
அவற்றில் ரயில் விடவேண்டுமானால், அதற்கு செலவு அதிகமாகும். இந்நிலையில், அந்த ரயில் பாதைகளில் கார்களை இயக்கும் திட்டம் ஒன்றை பிரெஞ்சு நிறுவனம் ஒன்று தீட்டிவருகிறது.
ரயில் பாதையில் ஓடும் கார்கள்
Ferromobiles என அழைக்கப்படும் அந்த கார்கள், போக்குவரத்துக்கு கார்களை மட்டுமே நம்பியிருக்கும் கிராமப்புறங்களை இணைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

SICEF என்னும் நிறுவனம், ரயில் பாதைகளில் இயங்கும்வகையிலான வேன்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த மாதம் பிரான்சிலுள்ள Courpière -Vertolaye ரயில் பாதையில் இந்த திட்டம் சோதனை முயற்சியாக துவக்கப்பட உள்ளது.
அது வெற்றி பெறும் நிலையில், Occitanie, Brittany அல்லது Nouvelle -Aquitaine போன்ற பாதைகளிலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிரான்சைப் பொருத்தவரை, அங்கு 5,700 கிலோமீற்றர் தொலைவிலான ரயில் பாதை பயன்பாட்டில் இல்லாமல் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |