விலைவாசி உயர்வால் தனிப்பட்ட சுகாதாரத்தையே கண்டுகொள்ளாத பிரெஞ்சு மக்கள்
விலைவாசி உயர்வு காரணமாக பிரெஞ்சு நுகர்வோர் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
விற்பனை கடுமையாக சரிவு
வாடிக்கையாளர்களின் இந்த மாற்றம் என்பது சில்லறை விற்பனையாளர்கள், அரசியல்வாதிகள், நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
@reuters
மக்களின் அன்றாடத் தேவைகளான ஷவர் ஜெல், டம்பான்கள், பாத்திரங்களைக் கழுவும் பொருட்கள், சலவை சோப்பு மற்றும் கழிப்பறை காகிதம் உள்ளிட்டவையின் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது.
குறிப்பிட்ட இந்த பொருட்களின் விலையானது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகரித்துள்ளதாகவே தெரியவந்துள்ளது. இன்னொரு ஆய்வில், மக்கள் குறைவாக சாப்பிட்டு, குறைவாக குளித்து, குறைவான எண்ணிகையில் வீட்டை சுத்தம் செய்து, குறைவான பாத்திரங்களையே பயன்படுத்தவும் செய்வதாக தெரிய வந்துள்ளது.
முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் ஜனாதிபதி மேக்ரானின் அரசாங்கம் நிதிநிலை அறிக்கையில் மளிகைப்பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்றே கூறப்படுகிறது.
Credit: MAXPPP
மேலும் குறைக்கப்படும் விலை, எதிர்வரும் ஜனவரி 15ம் திகதியில் இருந்தே அமுலுக்கு வரும் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, Nestle மற்றும் Pepsico நிறுவனங்களை பல்பொருள் அங்காடிகள் மற்றும் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
விலை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்த நிறுவனங்கள் ஒத்துழைக்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும், மக்கள் இனி குறைவான பொருட்களை வாங்கும் நிலை உருவாகலாம் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |