இந்த முகமூடியின் விலை ரூ.36 கோடி! மதிப்பு தெரியாமல் விற்றுவிட்டு நீதிமன்றம் சென்ற பிரெஞ்சு தம்பதி
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதி தங்களிடமிருந்த அரிய கலைப்பொருளை சொற்ப காசுகளுக்கு விற்றுவிட்டு, பின்ன அதன் மதிப்பு தெரிந்தவுடன் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
ஒரு தம்பதி தங்களிடம் இருந்த வித்தியாசமான முகமூடியை ரூ.13,000க்கு விற்றுள்ளனர். ஆனால் அந்த அரிய கலைப்பொருள் ஏலத்தில் ரூ.35 கோடிக்கு விலை போனதால், அதன் மதிப்பை அறிந்த தம்பதியினர் நீதிமன்றம் சென்றனர்.
இவ்வளவு விலை போன முகமூடியின் சிறப்பு என்ன?
பிரான்சின் நிம்ஸைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் 2021-ல் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அகற்றியுள்ளனர். அப்போது தங்களிடம் இருந்த ஆப்பிரிக்க முகமூடியை மிஸ்டர் Z என்ற கலை வியாபாரிக்கு 129 பவுண்டுகளுக்கு (ரூ. 13,158) விற்றனர்.
முகமூடியை வாங்கிய பிறகு அது அதிகபட்சம் 520 பவுண்டுகள் வரை விற்கப்படலாம் என நினைத்துள்ளார். இருப்பினும், வியாபாரி மூன்றாவது கருத்தைத் தேடினார். கார்பன்-14 டேட்டிங் மூலம் பகுப்பாய்வு செய்த பிறகு, முகமூடி 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது.
சில மாதங்களுக்குப் பிறகு, கலை வியாபாரி மிஸ்டர் Z அந்த முகமூடியை ஏலத்தில் 3.6 மில்லியன் பவுண்டுகளுக்கு (ரூ. 36.8 கோடி) விற்றார்.
தாங்கள் விற்ற முகமூடியின் மதிப்பு இவ்வளவு என்று செய்தித் தாளில் வந்த செய்தியிலிருந்து அறிந்தவுடன் தம்பதியினர் Mr Z மீது வழக்குத் தொடர்ந்தனர். அதன் பெறுமதி அறிந்து ஏமாற்றியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
விசித்திரமான தோற்றமுடைய முகமூடியை காபோனில் உள்ள ஃபாங் மக்கள் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளின் போது பயன்படுத்துகின்றனர். இந்த கலைப்பொருள் மிகவும் அரிதானது மற்றும் ஒரு சில மேற்கத்திய அருங்காட்சியகங்கள் மற்றும் சேகரிப்புகளில் மட்டுமே காணப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
African Mask, Rare Artifact, France, African Mask auction, French Couple sold Rare Artefact, Mr. Z art dealer