ரஷ்ய எண்ணெய் கப்பலின் சீன கேப்டனுக்கு..சிறைத்தண்டனை விதித்த பிரான்ஸ் நீதிமன்றம்
ரஷ்யாவுடன் தொடர்புடைய எண்ணெய்க் கப்பல் கேப்டனுக்கு பிரெஞ்சு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது.
மேற்கத்தியத் தடைகளை மீறி
கடந்த செப்டம்பர் மாதம் the Boracay என்ற ரஷ்யாவின் நிழல் கப்பல் படை என சந்தேகிக்கப்படும் எண்ணெய்க் கப்பல், பெனின் நாட்டுக் கொடியைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது.

மேலும், அந்த கப்பல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக விதிக்கப்பட்ட மேற்கத்தியத் தடைகளை மீறி, ரஷ்ய எண்ணெயைக் கொண்டு செல்லும் கப்பல் குழுவின் ஒரு பகுதியாகவும் கருதப்பட்டது.
மேற்கு பிரான்ஸின் சர்வதேச கடல் பகுதியில் பிரெஞ்சு கடற்படை, அந்தக் கப்பலை அணுகியபோது அது கண்ணுக்குத் தெரியும் கொடி ஏதுமின்றி, இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெயைக் கொண்டு செல்வதாகவும் கருதப்பட்டது.
ஓராண்டு சிறைத் தண்டனை
எனினும், பிரெஞ்சு கடற்படை அந்தக் கப்பலைக் கைப்பற்றி சில நாட்களுக்குப் பிறகு கப்பல் மற்றும் அதன் உறுப்பினர்களை விடுவித்தது.
இந்த நிலையில், தனது கப்பலை நிறுத்துமாறு இடப்பட்ட உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியத் தவறியதற்காக, அந்த கப்பலின் கேப்டனுக்கு அவர் இல்லாத நிலையில், பிரெஞ்சு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

தி ஃபீனிக்ஸ் எனப் பெயரிடப்பட்டு, ரஷ்யக் கொடியை ஏந்தியுள்ள 'The Boracay' கப்பல், திங்களன்று மலேசியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையேயான மலாக்கா நீரிணையில் இருந்ததாக, டேங்கர் கப்பல்களைக் கண்காணிக்கும் Marine Traffic இணையதளம் தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை
கப்பல் கேப்டனின் வழக்கறிஞரான ஹென்றி டி ரிச்மோண்ட் இந்த தீர்ப்பை "முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதது" என்று கூறியுள்ளார்.
அவர், 'கப்பல் சர்வதேச கடல் பகுதியில் இருந்ததால், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க பிரெஞ்சு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை' என்று வாதிடுகிறார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு டென்மார்க் மீது பறந்த மர்மமான ட்ரோன் விமானங்களுடன் 'Boracay' கப்பலுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |