பக்கத்து நாட்டில் கொள்ளையடிக்க சமூக ஊடகங்கள் மூலம் ஆள் சேர்க்கும் குற்றவாளிக் கும்பல்கள்
French criminal networks are recruiting teenagers through social media: கொள்ளையடிக்க, சமூக ஊடகம் வாயிலாக ஆள் சேர்க்கின்றன பிரான்ஸ் கொள்ளை கும்பல்கள்.
சுவிட்சர்லாந்தில் கொள்ளையடிக்க, சமூக ஊடகம் வாயிலாக ஆள் சேர்க்கின்றன பிரான்ஸ் கொள்ளை கும்பல்கள் சில.
பக்கத்து நாட்டில் கொள்ளையடிக்க...
பிரான்சை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த கொள்ளைக் கும்பல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களை பண ஆசை காட்டி ஈர்க்கின்றன.

அவர்களை வைத்து சுவிட்சர்லாந்தில் உள்ள துப்பாக்கிக்கடைகளில் கொள்ளையடிக்கும் இந்த கும்பல்கள், அந்தத் துப்பாக்கிகளை கருப்புச் சந்தையில் விற்று பணம் பார்க்கின்றன.
ஒரு கட்டத்தில் இளைஞர்கள் குற்றச்செயல்களிலிருந்து பின்வாங்கும்போது, அவர்களை மிரட்டி மீண்டும் கொள்ளையடிக்க வைக்கின்றன இந்தக் கும்பல்கள்.
அவ்வகையில் இதுவரை சுவிட்சர்லாந்தில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
என்றாலும், அவற்றில் 22 முயற்சிகளின்போது கொள்ளையர்களால் கொள்ளையடிக்க முடியாமல் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.