ஆஸ்கர் போட்டியில் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் இயக்குநரின் திரைப்படம்
பிரான்ஸ் நாட்டு இயக்குநர் ஒருவரின் திரைப்படம் ஒன்று, ஆஸ்கர் போட்டியில் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னிலை வகிக்கிறது.
13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம்
பிரான்ஸ் நாட்டு இயக்குநரான Jacques Audiard என்பவர் இயக்கிய Emilia Pérez என்னும் திரைப்படம், ஆஸ்கர் போட்டியில் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், திரைக்கதை, பாடல்கள், சிறந்த துணை நடிகை என 13 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, Emilia Pérez என்னும் திரைப்படம்.
திரைப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று என்னவென்றால், திரைப்படத்தின் கதாநாயகியாகிய கார்லா சோஃபியா காஸ்கோன் (Karla Sofía Gascón) ஒரு திருநங்கை ஆவார்.
அத்துடன், கார்லா, ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை நடிகரும் ஆவார்.
Emilia Pérez என்னும் அந்த திரைப்படம், மெக்சிகோ நாட்டவரான போதைக்கடத்தல் கும்பல் தலைவர் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்டு புது வாழ்வைத் துவக்குவதற்கு அவருக்கு உதவும் ஒரு சட்டத்தரணியைக் குறித்த ஒரு திரைப்படமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |