சூடு பிடிக்கும் பிரான்ஸ் தேர்தல்: ஒரு கட்சிக்கெதிராக திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள்
பிரான்சில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரபரப்பான பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கருத்துக்கணிப்புகளில் வலதுசாரிக் கட்சி ஒன்று பெரும்பான்மை பெற்றுவரும் நிலையில், அக்கட்சிக்கெதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணியில் இறங்கிய சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது.
ஒரு கட்சிக்கெதிராக திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள்
பிரான்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், பிரான்சின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான, வலதுசாரிக் கொள்கைகள் கொண்ட, National Rally கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என கணித்துள்ளன.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை, அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி, ஆயிரக்கணக்கான பெண்கள் பிரான்ஸ் முழுவதும் தெருக்களில் இறங்கி, National Rally கட்சிக்கெதிராக பேரணி நடத்தினார்கள்.
சுமார் 200 பெண் உரிமை அமைப்புகளும், யூனியன்களும் பாரீஸ் உட்பட பிரான்சின் பல நகரங்களில் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
வலதுசாரிக் கட்சிகள் ஆட்சி செய்தால் பெண் உரிமைகள் பாதிக்கப்படும் என்று கூறி அவர்கள் பேரணிகள் நடத்திய நிலையில், தலைநகர் பாரீஸில் மட்டும் 10,000 பெண்கள் பேரணியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |