தீபாவளி என்றைக்கு? பிரெஞ்சு தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு சுவாரஸ்ய வீடியோ
இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, பிரெஞ்சு தூதரகம் வெளியிட்டிருந்த வீடியோ குறித்த செய்தி நினைவிருக்கலாம்.
இந்நிலையில், தீபாவளி குறித்து ஒரு சுவாரஸ்ய வீடியோவை இந்தியாவிலுள்ள பிரெஞ்சு தூதரகம் வெளியிட்டுள்ளது.
தீபாவளி என்றைக்கு?
இந்தியாவில் பலருக்கும் இந்த ஆண்டு தீபாவளி என்றைக்கு என்னும் ஒரு குழப்பம் உள்ளது. சில மாநிலங்கள், அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களுமே விடுமுறை அறிவித்துவிட்டன.
இந்தியர்களுக்கே தீபாவளி என்று என்பது குறித்து இப்படி ஒரு குழப்பம் என்றால், வெளிநாட்டவர்கள் நிலை என்ன?
ஆக, இந்தியாவிலிருக்கும் பிரெஞ்சு தூதரகத்திலுள்ள ஊழியர்களுக்கும் இதே குழப்பம்தான். என்றைக்கு தீபாவளி என்று தெரிந்தால்தானே சரியாக தீபாவளி வாழ்த்துக் கூற முடியும்!
எனவே, தூதரக ஊழியர்கள் ஒவ்வொருவராக தீபாவளி என்றைக்கு என்று விசாரிக்க, சிலர் அக்டோபர் 20 என்றும் சிலர் அக்டோபர் 21 என்றும் கூற, ஒரே குழப்பம்தான்.
Confused about the Diwali date? So are we!
— French Embassy in India 🇫🇷🇪🇺 (@FranceinIndia) October 17, 2025
But one thing’s certain: lights, joy, and sweets await!
Watch our special video on Deepavali - the festival of lights:
🪔🇫🇷🤝🇮🇳 #HappyDiwali #शुभदीपावली pic.twitter.com/LgY2igoNWO
கடைசியில், இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதரான Thierry Mathou, தீபாவளி அக்டோபர் 20ஆம் திகதியானாலும் சரி, 21ஆம் திகதியானாலும் சரி, தீபாவளியின் தீபங்கள் பிரகாசமாக ஒளிரத்தான் செய்யும்.
ஆகவே, நாம் இரண்டு நாட்களும் தீபாவளியைக் கொண்டாடுவோம் என்று கூற, அவரும் மற்ற தூதரக ஊழியர்களும் இந்தியர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் வீடியோ நிறைவடைகிறது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |