பிரான்சில் விவசாய நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 150 டன் தங்கம்: பின்னர் நடந்தது என்ன?
பிரான்சில் விவசாயி ஒருவரின் நிலத்தில் 150 டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் மத்திய பகுதியில் உள்ள ஆவர்ன் (Auvergne) பகுதியில், விவசாயி மிசெல் டுபோன்ட் (Michel Dupont) தனது நிலத்தை பார்வையிடும் போது, ஒளிரும் பொருள் கண்ணில் பட்டது.
நெருக்கமாக சென்று பார்த்த போது, அது உண்மையான தங்கத் துகள்கள் என்று உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட ஆய்வுகளின்படி, மொத்தமாக 150 டன் தங்கம் அந்த நிலத்தில் இருக்கக்கூடும் என அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் மொத்த மதிப்பு 4 பில்லியன் யூரோ என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது இக்காலத்தில் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பாரிய தங்க வளமாகும்.
ஆனால், இக்கண்டுபிடிப்புக்கு பிறகு பிரான்ஸ் அரசு உடனடியாக சுரங்க நடவடிக்கையை தடை செய்துள்ளது.
சூழலியல் பாதிப்பு, சட்ட ஒழுங்குகள் உள்ளிட்டவை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதால், நிலம் மூடப்பட்டுள்ளது.
பிரான்சில், தனியார் நிலத்திலும் கிடைக்கும் இயற்கை வளங்கள் மீது அரசாங்கத்துக்கே உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மக்களின் மனநிலை வெவ்வேறாக உள்ளது. சிலர் இதை புதிய வேலைவாய்ப்புகளுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் வாய்ப்பாக பார்க்கிறார்கள்.
சிலர் சுற்றுச்சூழல் அழிவை பற்றி கவலைப்படுகிறார்கள். வனங்கள், உயிரியல் வளங்கள் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் சுரங்க நடவடிக்கைகள் குறித்துப் பல சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த தங்கக் கண்டுபிடிப்பு நடந்த நேரத்தில் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை புகிய உச்சத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
French farmer gold discovery, 4 billion euro gold France, Auvergne gold find 2025, Gold found on private land France, Michel Dupont gold nuggets, France mining law private property, French natural resources regulation